பிரபுதேவாவுக்கு இந்தி ரசிகர்கள் மெழுகுசிலை உருவாக்குகிறார்கள். இவர் அங்கு முன்னணி இயக்குனராகியுள்ளார். இந்தியில் இயக்கிய ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா படங்கள் வெற்றிகரமாக ஓடின. தற்போது அஜய்தேவ் கான், சல்மான்கான் நடிக்கும் பெயரிடப்படாத இரு படங்களை இயக்கிக்கொண்டிருகின்ரார்.
ராம்போ ராஜ்குமார் என்ற இந்தி படமும் கைவசம் உள்ளது. இவரே தனது படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராகவும் பணியாற்றுகிறார். பிரபுதேவா நடனத்துக்கு இந்திபட உலகில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர்கள் இந்த மெழுகு சிலையை உருவாக்குகிறார்கள்.
லண்டன் மியூசியத்தில் அமிதாப்பச்சன், சச்சின், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் போன்றோருக்கு மெழுகு சிலைகள் உள்ளன. அந்த சிலைகளுக்கு இணையாக பிரபுதேவா சிலை தயாராகிறது.