ஜெயம் ரவி வீட்டில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு கை எழும்பு முறிந்தது. பூலோகம், நிமிர்த்து நில் ஆகிய இரு படங்களில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். பூலோகம் பட வேலைகள் முடிந்து வெளியிட தயாராகிறது. இதில் நாயகி திரிஷா. இப்படத்தை கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். படம் விரைவில் வெளியாக உள்ளது.
நிமிர்த்து நில் படத்தை சமுத்திரக்கனி இயக்குகின்றார். அமலா பால் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது. இந்த நிலையில் ஜெயம் ரவி கீழே விழுந்து கையை முறித்துக் கொண்டு உள்ளார். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
கை முறிந்ததால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளது என்று டுவிட்டரில் ஜெயம் கூறியுள்ளார். படப்பிடிப்புகளுக்கு வராததால் நிறுத்தப்பட்டு உள்ளன. ஜெயம் ரவி குணமடைய நடிகர், நடிகைகள் பலர் வாழ்த்தியுள்ளனர்.