இங்கிலாந்தில் ஒரு கிளாஸ் தண்ணி கேட்டு தராத காதலியை 100 முறை கத்தியால் குத்திய காதலனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தின் பிரிங்டான் பகுதியில் காதலன், காதலி அவர்களுடைய 2 வயது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளனர். காதலன் வேலைக்கு போகாமல் வீட்டிலே இருக்கும் காரணத்தினால், கணவன்- மனைவி இருவருக்கும் மத்தியில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.இதற்கிடையே சம்பவதினத்தன்று, காதலன் தன் காதலியிடம் ஒரு கிளாஸ் தண்ணீர் கொண்டு வா என்று கூறியுள்ளார்.
அதற்கு காதலி தண்ணீர் தர மறுத்துவிட்டதால், கோபம் அடைந்த காதலன், அருகில் இருந்த கத்தியை எடுத்து தன்னுடைய காதலியை சரமாரியாக 100 இடங்களில் குத்தி காயப்படுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.உயிரை கையில் பிடித்துக் கொண்டு வந்த காதலி, பேருந்து நிலையம் சென்றதுடன் பேருந்தில் ஏறி மயங்கி விழுந்துள்ளார்.இதை பார்த்த ஓட்டுநர் உடனடியாக பொலிசுக்கு தகவல் அளித்துள்ளார், விரைந்து வந்த அதிகாரிகள் குறித்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர், அவரின் கழுத்து பகுதியில் கத்தியின் சிறு நுணிப்பகுதி உடைந்து ஒட்டியுள்ளதாகவும், இரண்டு நுரையீரலும் சேதமடைந்துள்ளதால் சுமார் 500 தையல் போட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதனைதொடர்ந்து குறித்த பெண் அளித்த தகவலின் பேரில் காதலனை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், இவருக்கு நீதிபதி 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.






