படம் கைவிடப்பட்ட நிலையில்கூட முற்பணத்தை திருப்பி கொடுக்க மறுத்த நயன்தாரா!!

508

nayan

தமிழில் வெளிவந்த ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர் கோபிசந்த். இவர் டோலிவுட் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது தமிழிலும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் நயன்தாரா இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் ஏற்கெனவே ஒரு படத்தை தயாரிப்பதாக இருந்தது. அந்த படத்தை பூபதி பாண்டியன் இயக்கப்போவதாகவும் இருந்தது.

இந்த படத்துக்கு ஹீரோயினாக நடிக்க நயன்தாராவுக்கு அட்வான்ஸ் பணம் கொடுத்தும் ஒப்பந்தம் செய்துள்ளார் தயாரிப்பாளர். ஆனால், பூபதிபாண்டியனுக்கும், தயாரிப்பாளருக்கும் மனக்கசப்பு ஏற்படவே படத்தை இயக்குவதிலிருந்து பூபதி பாண்டியன் விலகினார்.

படம் டிராப் ஆன நிலையில் நயன்தாராவுக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார் தயாரிப்பாளர். ஆனால், அதற்கு நயன்தாராவோ, அட்வான்ஸ் பணம் என்னிடமே இருக்கட்டும். நீங்கள் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்கிறேன் என்றாராம். இதனால் தயாரிப்பாளருக்கு தர்மசங்கடம் ஏற்பட்டு விட்டதாம்.



இந்நிலையில், வேறு ஒரு இயக்குனரை வைத்து படத்தை தயாரிக்க முடிவு செய்தார் தயாரிப்பாளர். அந்த படம்தான் கோபிசந்த், நயன்தாரா நடிக்க உருவாக உள்ளது. இப்படத்தின் தொடக்க விழா சமீபத்தில் சென்னையில் நடந்தபோதுகூட நயன்தாரா நேரில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.