இலங்கை கிரிக்கெட் வீரர் நுவான் குலசேகர கைது!!

627

nuwan

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான நுவான் குலசேகர, சற்றுமுன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கொழும்பு, கடவத்தையில் இடம்பெற்ற வாகன விபத்தின் காரணமாகவே நுவான் குலசேகர கைதானார்.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த நுவான் குலசேகரவின் வாகனம், மோட்டார் சைக்களுடன் மோதி விபத்தை ஏற்படுத்திய நிலையில் 28 வயதானவர் பலியானார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குலசேகர,மஹர நீதிவான நீதிமன்றத்தில் முன்னிலை செய்யப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.