15 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய 20 வயது இளைஞர் கைது!!

482

A little girl poses for photographs to illustrate the topic of child abuse in Canberra, Monday, Oct. 28, 2013. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING

 

15 வயதான சிறுமியுடன் சட்டபூர்வமற்ற முறையில் ஏழு மாதங்கள் குடும்பம் நடத்தி அவரை கர்ப்பிணியாக்கிய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாதம்பை – மஹபத்தேகம பகுதியைச் சேர்ந்த, 20 வயதான குறித்த சந்தேகநபரை சிலாபம் பொலிஸின் மகளிருக்கான அலுவலகம் கைதுசெய்துள்ளது.

சிலாபம் பொலிஸாரின் மகளிர் விவகார பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, வாடகை வீடொன்றில் சிறுமியுடன் தங்கியிருந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இளைஞருடன் ஏற்பட்ட காதல் காரணமாக, கடந்த பெப்ரவரி மாதம் முதல் குறித்த வீட்டில், கணவன் மனைவியாக வாழ்ந்து வருவதாக சிறுமி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதன் பிரதிபலனாக தான் இரண்டு மாதங்கள் கர்ப்பிணியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிறுமி தங்கியிருந்த வீடு மாதம்பை பகுதியிலுள்ளதால், குறித்த வழங்கு விசாரணைகள் மாதம்பை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் சிறுமி வைத்தியப் பரிசோதனைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.