வெங்கட்பிரபு இயக்கத்தில், கார்த்தி – ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் பிரியாணி. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளார். இது அவருக்கு 100வது படம்.
இப்படத்தை தயாரித்துவரும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் படத்தை முதலில் ரம்லான் தினத்தன்று வெளியிட முடிவு செய்தது. ஆனால் படப்பிடிப்பு முடிவடையாததால் வெளியிட முடியவில்லை. பின்னர், தீபாவளிக்கு வெளியிடலாம் என முடிவெடுத்து, பாடல்களைக் கடந்த மாதம் வெளியிட்டனர். ஆனால், தீபாவளிக்கும் படத்தை ரிலீஸ் செய்யப் போவதில்லையாம்.
அதற்குப் பதிலாக கார்த்தி நடித்த மற்றொரு படமான ஆல் இன் ஆல் அழகுராஜாவை ரிலீஸ் செய்யப் போகிறார்களாம். இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களின் இயக்குநரான ராஜேஷ், இந்தப் படத்தை இயக்கி உள்ளார். எஸ்.தமன் இசை அமைத்துள்ளார். இந்த மாத இறுதியில் பாடல்களை வெளியிட உள்ளனர்.
அஜித்தின் ஆரம்பம் தீபாவளிக்கும், வீரம் பொங்கலுக்கும் ரிலீஸாவதைப்போல ஆல் இன் ஆல் அழகுராஜா தீபாவளிக்கும், பிரியாணி பொங்கலுக்கும் ரிலீஸாகிறது.