பொலிஸாரிடம் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டவர் ஆற்றில் விழுந்து பலி!!

480

dead

சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச்செல்ல முற்பட்ட போது ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவிசாவெல-குடகம பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

34 வயதான செல்வராஜ் ரவீந்திரன் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக விசாவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸார் குறித்த ஆற்றுப் பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது பொலிஸாரிடம் தப்பித்துக் கொள்வதற்காக குறித்த நபர் ஆற்றில் பாய்ந்துள்ளதாகவும், இதன்போதேஉயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.