இம்முறை 27,603 மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் செல்லும் வாய்ப்பு!!

608

gra

இம்முறை 27,603 மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தைவிட இம்முறை பல்கலைக்கழக அனுமதியில் 10 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இதன் தலைவர் மொஹான் த சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள்இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.