பொலிஸாரின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பி களனி கங்கையில் குதித்தவர் உயிரிழப்பு!!

596

dead

அவிசாவளை – குடாகம பகுதியில் பொலிஸாரிடம் இருந்து தப்பி, களனி கங்கையில் குதித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்று காலை உயிரிழந்தார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பின் போதே அவர் களனி கங்கையில் குதித்துள்ளார்.

களனி கங்கையில் சட்டவிரோதமாக சிலர் அகழ்வில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில், நேற்று முன்தினம் (19.09) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் தப்பியோடுவதற்கு முயற்சித்த சந்தேகநபர் ஒருவர் களனி கங்கையில் குதித்துள்ளார்.

பின்னர் பிரதேசவாசிகள் சந்தேகநபரைக் காப்பாற்றி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எவ்வாறாயினும், அந்நபர் உயிரிழந்தார்.