கடலுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டி!!

359

c1

இங்­கி­லாந்தில் நேற்­று ­முன்­தினம் கட­லுக்கு மத்­தியில் கிரிக்கெட் போட்­டி யொன்று நடத்­தப்­பட்­டது. இங்­கி­லாந்து பிர­தான நிலப்­ப­ரப்­புக்கும் இங்­கி­லாந்தின் தென் பகுதியிலுள்ள வைட் தீவுக்கும் இடை­யி­லான கடற்­ப­கு­தி­யி­லுள்ள மணல் திட்டில் இப்போட்டி நடை­பெற்­றது.

ஐலன்ட் செய்லிங் கிளப் மற்றும் ரோயல் சதர்ன் யாட்ச் கிளப் ஆகிய அணிகள் இப்போட்­டியில் மோதின. 50 நிமி­டங்கள் நீடித்த இப்போட்­டியில் ஐலன்ட் செய்லிங் கிளப் அணி வெற்­றி­யீட்­டி­யது.

கோடைப் பரு­வத்தில் இக்­ க­டற்­ப­கு­தியில் நீர் வற்­று­வதால் வெளிக்கி­ளம்பும் மணல் திட்­டு­களில் வரு­டாந்தம் இக்­ கி­ரிக்கெட் போட்டி நடை ­பெ­று­கி­றது. 1950களி­லி­ருந்து இப் ­போட்டி நடை­பெ­று­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

போட்­டி­யா­ளர்­களும் பார்­வை­யா­ளர்­களும் பட­குகள் மூலம் மேற்­படி மணல் திட்டுக்களை வந்­த­டைந்­தமை குறிப்பிடத்தக்கது. களத் தடுப்பாளர்கள் பலர் நீரில் நின்றுகொண்டு களத் தடுப்பில் ஈடுபட்டனர்.

c2