
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தொடரி, பைரவா என இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்த தொடரி படம் வரும் செப்டம்பர் 22ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள ஹரிஷ் உத்தமன் படத்தை பற்றி பேசும்போது, படத்தில் கீர்த்தி சுரேஷின் தலைமுடியை பிடித்து இழுக்கும் ஒரு காட்சி இருந்தது.
அந்த காட்சி கண்டிப்பாக கீர்த்தி சுரேஷுக்கு வலியை தரும் என்று தோன்றியது. இயக்குனர் என்னிடம் சொன்ன போது, நான் கீர்த்தி சுரேஷிடம், கண்டிப்பாக உங்களுக்கு வலிக்கும் என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறினேன்.ஆனால் கீர்த்தி எதை பற்றியும் கவலைப்படாமல் நாம் காட்சியை நன்றாக எடுத்து முடிப்போம் என்று கூறினார் என்றார்.




