வவுனியா பொது வைத்தியசாலையில் குடிநீரின்றி நோயாளர் அவதி!!

268

vavuniya_hospital

வவுனியா பொது வைத்தியசாலையில் குடிநீர் பெறுவதற்கான வசதிகள் இன்றி நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா பொது வைத்தியசாலையானது வவுனியா மாவட்டத்து மக்கள் மட்டுமல் வன்னிக்கான அனைத்து மக்களும் சிகிச்சை பெற்றுச் செல்லும் தள வைத்தியசாலையாக இருப்பதுடன் மாகாண வைத்திசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் குடிக்க நீரின்றி பணம் செலுத்தி தண்ணிர் பெற்று வருகின்றனர்.

வடமாகாண முதலமைச்சர் தலைமையில் கடந்த (25.02.2015) அன்று தியாகி அறக்கட்டளை நிறுவனத்தினால் 37 இலட்சம் ரூபா செலவில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையமொன்று வவுனியா பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்ட்டு திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இதன்மூலம் வைத்தியசாலையின் நீர்ப்பிரச்சனை தீர்க்கப்பட்டிருந்த நிலையில் இன்று அந்த சுத்திகரிப்பு நிலையம் செயற்படவில்லையென தெரியவருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர்..

நோயாளர்கள் மாத்திரமின்றி ஊழியர்களும் குடிநீரின்றி அவதிப்படுவதாகவும் குடிநீர் வழங்கியாக செயற்பட்டு வந்த குழாய்கள் பழுதடைந்துள்ள நிலையில் அதை திருத்துவதற்கு வைத்தியசாலை நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை இதன் காரணமாக போத்தலில் அடைக்கப்பட்ட தரமற்ற நீரை வாங்கிப் பருகும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் பணமில்லாத ஏழை மக்கள் குடி நீருக்கு பெரும் அவதிப்படுவதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.