வவுனியா மாவட்டபிரஜைகள் குழு எழுக தமிழ் நிகழ்விற்கு வருமாறு அழைப்பு!!

630

eluka-tamil

தியாகி திலீபனின் வீரமரணம் அடைந்த இந்நாளில் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் மக்களே எழுந்து வாருங்கள், எங்கள் தேசத்தை நாமே ஆள்வோம் என்ற தொணியில் வரும் 24.09.2016 காலை 9.00 மணிக்கு முத்தவெளி மைதானத்தில் ; நடைபெறவுள்ள ‘எழுக தமிழ் நிகழ்வில்’ அணி அணியாக திரண்டு வருமாறு வவுனியாமாவட்ட பிரஜைகள் குழு அழைப்பு விடுத்துள்ளது.

தாயகத்தின் சகலமாவட்டங்களிலிருந்தும் அரசஅரசார்பற்ற நிறுவனங்களைச் சார்ந்தோர், மதத்தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எனப்பலரையும் கலந்து கொள்ளுமாறு வவுனியாமாவட்ட பிரஜைகள் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வில் அரசியல்கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் விடுதலை, எமது தாயக பிரதேசங்களை நாமே ஆளுவதற்கான உரிமையை வென்றெடுத்தல், பாதுகாப்பு படையினர் எமது மக்கள் வாழ்ந்த காணிகளை விட்டு வெளியேற வேண்டும் போன்ற விடயங்களை சர்வதேச சமூகத்திற்கு உரத்து சொல்வதற்கும் தமிழ்மக்களே ஒன்றாக திரண்டு வருமாறு அறைகூவல் விடுக்கின்றோம் என வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் சார்பில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவரும் தமிழர் தாயகத்தின் கையளிக்கப்ட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களின் இணைப்பாளருமாகிய கோ.ராஜ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.