யாகூ பயனாளிகளுக்கு அதிர்ச்சித் தகவல்!!

297

yahoo

யாகூ இணையதளத்தில் கணக்கு வைத்திருக்கும் 50 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டில் இந்தத் தகவல் திருட்டு நடந்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ள நிலையில், இது குறித்த விசாரணை நடைப்பெற்றி வருவதாக அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் யாகூ நிறுவனத்தில் கணக்கு வைத்திருக்கும் சுமார் 20 கோடி பேரின் தகவல்களை விற்க PEACE என்ற பெயருடைய ஹேக்கர் முன்வந்தபோது தான் இத்திருட்டு குறித்து முதல் முறையாக செய்தி வெளியாகியுள்ளது.

கணக்கு வைத்திருப்போரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, பிறந்த திகதி, கடவுச்சொல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் யாகூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

2014 முதல் கடவுச் சொற்களை மாற்றாத நபர்கள் உடனடியாக அவற்றை மாற்றும் படி யாகூ நிறுவனம் அதன் பயனாளிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த ஜூலையில் சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய்க்கு யாகூ நிறுவனத்தை அமெரிக்காவின் தொலைத் தொடர்புத்துறை நிறுவனமான வெரிசான் வாங்கியமை குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவல் திருட்டு தொடர்பான விசாரணைகளை கூர்ந்து கவனித்து வருவதாகவும், அனைத்து தகவல்களும் பெறப்பட்டபின் இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் வெரிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.