விசாரணை திரைப்படம் ஒஸ்கார் விருதிற்கு பரிந்துரை!!

539

visaranai

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷின் தயாரிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான விசாரணை திரைப்படம் ஒஸ்கார் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த M. சந்திரக்குமாரின் புகழ் பெற்ற நாவலான “லாக் அப்” நாவலை தழுவி வெளியான இந்த படம் 72 ஆவது வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

மேலும் 63 ஆவது தேசிய விருது வழங்கும் விழாவில் கிட்டத்தட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதையும் இப்படம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் நிலையத்தின் செயல்பாடுகளை காட்சிப்படுத்தியிருந்த இந்த திரைப்படம் தற்போது ஒஸ்கார் விருதிற்கு வெளிநாட்டு திரைப்பட பிரிவில் இந்திய சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்திய திரைப்பட கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி மராட்டிய மொழிப் படமான சாய்ரட், ஹிந்தி மொழிப் படங்களாக நீர்ஜா, உத்தா பஞ்சாப், நில் பட்டி சன்னாட்டா மற்றும் கன்னட மொழிப் படமான திதி ஆகிய படங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.