திருமணமான நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த 56 வயது பெண்ணுக்கு தைவான் நீதிமன்றம் 298 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ள தீர்ப்பு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்வானின் மத்திய சங்குவா மாகாணத்தை சேர்ந்த தனது 50 வயது கணவர், 56 வயதான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக அவரது மனைவி பொலிசில் புகார் அளித்தார்.
தனது கணவருடன் ஓட்டல் அறையில் சல்லாபத்தில் ஈடுபட்டிருந்த அந்த பெண்ணை கையும் களவுமாக புகார் அளித்த பெண் பொலிசாரிடம் பிடித்தும் கொடுத்தார். கள்ளத்தொடர்பு மற்றும் விபசாரம் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ள தாய்வானில் ஒருமுறை கள்ளத்தனமாக உறவு வைத்துக்கொள்பவர்களுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
பிடிபட்ட கள்ளத்தொடர்பு ஜோடிகள் வெவ்வேறு ஓட்டல்களில் 894 முறை அறை எடுத்து தங்களது லீலைகளை தொடர்ந்துள்ள விபரம் பொலிசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
தனது கணவர் திருந்திவிட்டதாக கூறுவதால் அவர் மீது கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக புகார் கூறிய பெண் பொலிசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து, அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் பிடிபட்ட 56 வயது பெண் மீது மட்டும் வழக்கு நடந்து வந்தது. ஓட்டல் அறைகளில் தங்கியிருந்ததற்கான பதிவேடுகளின் ஆதார அடிப்படையில் ஒரு முறை ஓட்டலில் கள்ளக்காதலருடன் தங்கிய குற்றச்சாட்டுக்கு 4 மாத தண்டனை என்ற விகிதத்தில் 894 முறை தங்கியதற்காக பெரும்பகுதி தண்டனையை குறைத்து குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு 298 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பு தாய்வான் மக்கள் மற்றும் பெண்ணுரிமை இயக்கத்தினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் யாரை காதலிப்பது, யாருடன் உறவு வைத்துக்கொள்வது, என்பது தொடர்பான உரிமைகளை பொலிசாரும் நீதிமன்றங்களும் பறித்து விடக்கூடாது.
விபசாரத்தில் சாராத ஆண் நண்பர்களுடன் உள்ள உடல் ரீதியான தொடர்புகளை அரசியலமைப்பின் குற்றப்பிரிவு சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர். அதே வேளையில், இந்த சட்டம் நீக்கப்பட்டுவிட்டால் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் கணவர்களை தங்களின் பக்கம் இழுக்க முடியாது என சில பெண்கள் கூறுகின்றனர்.
298 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட பெண் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.