அவதானம் : பச்சைக்குத்துவதினால் குருதி சார் நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்!!

728

tatoo

தரமற்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் டெட்டு எனப்படும் பச்சைக்குத்துவதினால் குருதி சார் நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

மூன்று விதமாக இந்த நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கை பொதுச் சுகதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறினார்.

பச்சைக்குத்துவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மூலமே பெரும்பாலும் இந்த தொற்று நோய்கள் பரவும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஒருவருக்கு பச்சைகுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் மற்றொருவருக்கும் பயன்படுத்தப்படுவதே இதற்கு காரணமாகும் என இலங்கை பொதுச் சுகதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டினார்.