கைவிலங்கிடப்பட்ட நிலையில் பொலிஸாரின் காரை கடத்திச் சென்ற கைதி!!

512

police

கொள்ளைக் குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட நபர் ஒருவர், கைவி­லங்­கி­டப்­பட்ட நிலை­யிலும் பொலி­ஸாரின் காரை கடத்திக் கொண்டு தப்பிச் சென்ற சம்­பவம் அமெ­ரிக்­காவில் அண்­மையில் இடம்­பெற்­றது.

இண்­டி­யானா மாநி­லத்­தி­லுள்ள டெரே ஹோட் நகரில் கொடி ட்ரையொன் (28) எனும் இளை­ஞரை கொள்ளைக் குற்­றச்­சாட்டின் கார­ண­மாக பொலிஸார் கைது செய்திருந்தனர்.

அதன் பின்னர், கொடி ட்ரையோனின் கைகளை அவரின் முதுக்குப் பின்னால் வைத்து கைவி­லங்­கிட்டு, பொலிஸ் ரோந் துக் காரின் பின்­புற ஆச­னத்தில் ஏற்­றினர்.

அதன்பின் அவரை காரில் தனி­யாக விட்­டு­விட்டு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் அப்பால் சென்­ற­போது, காருக்குள் முன்­புற, பின்­புற ஆச­னங்­க­ளுக்கு இடை­யி­லுள்ள உலோகத் தடுப்பை எப்­ப­டியோ உடைத்த கொடி ட்ரையோன் அந்த காரை செலுத்திச் சென்றார் என டெரே ஹோட் நகர பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

பின்னர் ஜி.பி.எஸ். சாத­னத்தின் உத­வி ­யுடன் மேற்­படி காரை பொலிஸார் கண்­டு­பி­டித்­தனர். அக்­காரை பொலிஸ் வாக­னங்கள் சுற்றி வளைத்­த­போது, கொடி ட்ரையோன் பல வாக­னங்­களை மோதித்தள்ளினார்.  இறுதியில் அவரை பொலிஸார் மீண்டும் கைது செய்தனர்.