கொள்ளைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், கைவிலங்கிடப்பட்ட நிலையிலும் பொலிஸாரின் காரை கடத்திக் கொண்டு தப்பிச் சென்ற சம்பவம் அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்றது.
இண்டியானா மாநிலத்திலுள்ள டெரே ஹோட் நகரில் கொடி ட்ரையொன் (28) எனும் இளைஞரை கொள்ளைக் குற்றச்சாட்டின் காரணமாக பொலிஸார் கைது செய்திருந்தனர்.
அதன் பின்னர், கொடி ட்ரையோனின் கைகளை அவரின் முதுக்குப் பின்னால் வைத்து கைவிலங்கிட்டு, பொலிஸ் ரோந் துக் காரின் பின்புற ஆசனத்தில் ஏற்றினர்.
அதன்பின் அவரை காரில் தனியாக விட்டுவிட்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அப்பால் சென்றபோது, காருக்குள் முன்புற, பின்புற ஆசனங்களுக்கு இடையிலுள்ள உலோகத் தடுப்பை எப்படியோ உடைத்த கொடி ட்ரையோன் அந்த காரை செலுத்திச் சென்றார் என டெரே ஹோட் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் ஜி.பி.எஸ். சாதனத்தின் உதவி யுடன் மேற்படி காரை பொலிஸார் கண்டுபிடித்தனர். அக்காரை பொலிஸ் வாகனங்கள் சுற்றி வளைத்தபோது, கொடி ட்ரையோன் பல வாகனங்களை மோதித்தள்ளினார். இறுதியில் அவரை பொலிஸார் மீண்டும் கைது செய்தனர்.






