சிங்கப்பூரில் அடுத்த பிரதமராகும் ஈழத் தமிழர்!!

548

14466484_1198328163547583_1588945487_o

சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ஈழத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட தமிழர் ஒருவருக்கு அதிகம் இருப்பதாக இணையத் தேடுதளமான யாகூ சிங்கப்பூர் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரின் துணைப் பிரதமரான தர்மன் சன்முகரத்னம் அடுத்த பிரதமராக தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதை கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 69 வீதமானோர் விரும்புவதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் வேட்பாளர் தெரிவுக்கான போட்டிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இணையத் தேடுதளமான யாகூ சிங்கப்பூர் நிறுவனம் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு இருக்கின்றது என்பது குறித்து கருத்துக்கணிப்பொன்றை நடத்தியுள்ளது.

இதற்கமைய சிங்கப்பூரின் தற்போதைய பிரதமர் லீ செயீன் லூங் இன் வெற்றிடத்திற்கு தற்போதைய துணைப் பிரதமரான தர்மன் சன்முகரத்னத்தை தெரிவு செய்ய சிங்கப்பூர் மக்களில் பெரும்பாலானோர் விரும்புவதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.இதற்கமைய 59 வயதுடைய தர்மன் சன்முகரத்னம் சிங்கப்பூர் பிரதமர் போட்டிக்கான தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார் என்பதும் உறுதியாகியுள்ளது.

இவருக்கு அடுத்த படியாக மற்றுமொரு துணைப் பிரதமரான தியோ சீ ஹேன்னுக்கு 34 வீதமானோரும், நிதி அமைச்சர் ஹெங் சயீ கியாட் 25 வீதமானோரும், பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் இற்கு 24 வீதமானோரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இவர்களைத் தவிர சமூக மற்றும் குடும்ப அபிவிருத்தி அமைச்சர் தான் சுவாங் ஜின்னும் பிரதமராக வரவேண்டும் எ று 16 வீதமானோர் வாக்களித்துள்ளனர்.