சிரியா மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்!!

346

syria-attack

சிரியா மீது பெரிய அளவில் பரந்துபட்ட இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டமிடுகிறார் என்று வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களையே அமெரிக்கா மேற்கொள்ளும் என்று வெளிப்படையாக கூறப்பட்டது.

இந்த விஷயம் தொடர்பில்,அமெரிக்க இராணுவப் படைகளின் துணைத் தலைவர் ஜெனரல் ஜாக் கீன் குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசியுள்ளார். கடந்த திங்கட்கிழமையன்று அதிபரின் வெள்ளை மாளிகையில் இது குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

சிரியா மீதான தாக்குதலுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தால் அதிபர் அஸதின் இராணுவத்துக்கு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு சேதங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக,அமெரிக்க அதிபர் ஒபாமா குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனது தனிப்பட்ட உறுதிமொழியை அளித்திருந்தார் என ஜெனரல் கீன் தெரிவித்தார்.

சிரியாவின் கிளர்ச்சிக் குழுவினருக்கான தங்களது ஆதரவை அதிகரிக்கவும் ஒரு திட்டம் உள்ளதாக ஜெனரல் கீன் மேலும் கூறினார்.