கிளிநொச்சி கண்டாவளை ஊரியான் பகுதியில் சுமார் 7500 மில்லி லீற்றர் கசிப்பினை உடமையில் வைத்திருந்தவருக்கு 70 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வயலில் வேலை செய்வது போன்று வேடமிட்டுச் சென்ற பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்ததுடன் உடமையில் வைத்திருந்த 7500 மி.லீ கசிப்பினையும் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தினர்.விசாரணையின் போது குறித்த நபருக்கு 70 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், கட்டளைச்சட்டத்தின் கீழ் இருபது நாட்கள் சமுக பணியில் ஈடுபடுமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், இதற்கென கிராம அலுவலர் பிரதேச செயலர் உறுதிப்படுத்தல்களுடன் கூடிய 50 ஆயிரம் ரூபா பிணையில் செல்லுமாறும் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.