கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்க புதிய முயற்சி!!

409

angry-dog-baring-teeth
கட்டாக்காலி நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுப்பதற்கான அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கையை குறைத்தல், கட்டாக்காலி நாய்களுக்கான ஊசியினை விரைவில் போடுதல், கட்டாக்காலி நாய்களை பாதுகாப்பதற்கான மத்திய நிலையங்களை அமைத்தல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, கடந்த சில நாட்களாக கட்டாக்காலி நாய்கலினால் விபத்துக்களும் அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.மேலும், கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை திட்டமிட இதற்கு முதலும் அதிகாரிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.