பங்களாதேஸின் இரண்டு கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன.பிஎன்எஸ் சோமுட்ரா அவிஜான் மற்றும் பிஎன்எஸ் சோமுட்ரா ஜோய் ஆகிய கப்பல்களே கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன.
இந்த கப்பல்களை இன்று இலங்கையின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்தி விஜேயகுணரட்ன பார்வையிடவுள்ளார்.இதேவேளை, ஆறு நாட்களுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்த கப்பல்களின் உள்ள கடற்படை வீரர்கள், இலங்கையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.