வரட்சியினால் பாதிக்கப்பட்ட மிருகங்களுக்கு நீர் வழங்க நடவடிக்கை!!

561

deer
வரட்சியினால் பாதிக்கப்பட்ட மிருகங்களுக்கு நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்குகள் நல பதில் அமைச்சர் சுமேதா ஜயசேன தெரிவித்துள்ளார்.கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

கடும் வரட்சி காரணமாக விலங்குகள் நீரைத் தேடி கிராமங்களுக்குள் பிரவேசிப்பதனை தடுக்கும் நோக்கில் தேசிய வனவிலங்கு சரணாலயங்களில் பவுசர் மூலம் நீர் விநியோகம் செய்யும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.யால, உடவளவ, வில்பத்து, லுனுகம்வெஹர, பந்துல, குமண, கல்ஓய உள்ளிட்ட வனவிலங்கு சரணாலயங்களில் பவுசர் மூலம் விலங்குகளுக்கு நீர் வழங்கப்படுகின்றது.

தேசிய வனவிலங்கு சரணாலயங்களில் காணப்படும் சிறு குளங்கள் ஏரிகளுக்கு நீர் விநியோகம் செய்யப்படுகின்றது.சில சரணாலயங்களில் சூரிய சக்தி மூலமான நீர் பம்புகளின் ஊடாக சிறு ஆறுகளுக்கு நீர் விநியோகம் செய்யப்படுகின்றது.வரட்சி காரணமாக விலங்குகள் கிராமங்களுக்குள் பிரவேசிப்பதனால் பாரியளவு பாதிப்புக்கள் ஏற்படக்கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.