இலங்கையில் அடுத்து வரும் வருடங்களில் பாரிய மின்சார பிரச்சினை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.2018 ஆம் ஆண்டில் அதிகளவான மின்சார நெருக்கடி ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காண புதிய மின்சார நிறுவனங்களை துரிதமாக அமைக்குமாறு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபையை கேட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் மின் நிலையங்கள் தொடர்பான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு சபை கோரியுள்ளது.இந்த தகவல்களை அடுத்த மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிப்பது அவசியமாகும்.
புதிய மின்நிலையங்களை அமைக்கும் திட்டத்திற்கு கடந்த 15 ஆம் திகதி அங்கீகாரம் வழங்கப்பட்டது.2017 ஆம் ஆண்டுக்கும், 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஏற்படும் அதிகளவிலான மின்சார கேள்விக்கு ஏற்ற விநியோகத்தை வழங்க புதிதாக எட்டு மின்நிலையங்களை நிர்மாணிப்பது அவசியமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.