ராம்குமாரின் உடல், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மருத்துவர்கள் 4 பேர் குழுவுடன் சேர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் சுதிர் கே குப்தாவும், ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை நடத்த உள்ளார்.
இதற்காக அவர் இன்று சென்னை வந்துள்ளார். 13 நாட்களுக்கு பிறகு ராயப்பேட்டையில் ராம்குமார் மருத்துவ பரிசோதனை தொடங்கியது. சென்னை மருத்துவர்கள் 4 பேருடன் இணைந்து அவரும் தற்போது பிரேத பரிசோதனையில் பங்கேற்றுள்ளார்.
ராம்குமார் பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ எடுக்கப்படுகிறது. 2 மணி நேரத்திற்கு மேலாக பிரேத பரிசோதனை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
தந்தை பேட்டி
ராம்குமாரின் உடலில் காயங்கள் உள்ளன எனவே பிரேத பரிசோதனை முடிந்தவுடன் அறிக்கை தேவை என்று சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாரின் தந்தை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.