சம்பியன்ஸ் லீக் தொடர் அட்டவணை மாற்றம்!!

418

Champions-League-T20-Winner

சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் நடக்கவுள்ள போட்டிகள் மொகாலி, ராஞ்சி மற்றும் அகமதாபாத்தில் நடத்தப்படுகிறது.

இந்தியாவில் சர்வதேச உள்ளூர் சம்பியன் அணிகள் பங்கேற்கும் ஐந்தாவது சம்பியன்ஸ் லீக் T20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 17ம் திகதி முதல் ஒக்டோபர் 6ம் திகதி வரை நடக்கிறது.

6வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று இடங்களை பிடித்த மும்பை, சென்னை, ராஜஸ்தான் அணிகளுடன் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் ஹீட், பெர்த் ஸ்கார்சர்ஸ், தென் ஆப்ரிக்காவின் லயன்ஸ், டைட்டன்ஸ், மேற்கிந்திய தீவுகளின் டிரினிடாட் அண்டு டுபாகோ உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.

தகுதிச் சுற்று: இந்தியா (3), அவுஸ்திரேலியா (2), தென் ஆப்ரிக்கா (2), மேற்கிந்திய தீவுகள் (1) சேர்ந்த 8 அணிகள் நேரடியாக பிரதான சுற்றில் விளையாடுகின்றன.

மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 உள்ளூர் அணிகள் தகுதிச் சுற்றில் பங்கேற்கின்றன.

தகுதிச் சுற்றுப் போட்டிகள் செப்டம்பர் 17-20ம் திகதிகளில் ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் சர்வதேச மைதானத்தில் நடக்க இருந்தன. விநாயகர் சதூர்த்தி ஊர்வலம், தெலுங்கானா பிரச்னை போன்ற காரணங்களுக்காக போதிய பாதுகாப்பு வழங்குவதில் ஐதராபாத் பொலிசுக்கு சிக்கல் ஏற்பட்டன.

இதனையடுத்து 6 தகுதிச் சுற்றுப் போட்டிகள் மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க (பி.சி.ஏ.,) மைதானத்துக்கு மாற்றம் செய்யப்பட்டன.

இதேபோல, ஐதராபாத்தில் நடக்க இருந்து ஆறு பிரதான சுற்றுப் போட்டிகளும் இடமாற்றம் செய்யப்பட்டன. இதன்படி, தலா இரண்டு போட்டிகளாக மொகாலி (செப்டம்பர் 24), ராஞ்சி (செப்டம்பர் 28), அகமதாபாத்தில் (செப்டம்பர் 30) உள்ள மைதானங்களில் நடத்தப்படுகிறது.