ஜேர்மனியில் குடியிருப்பு ஒன்றில் பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்றை பொலிசார் மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜேர்மனியின் Hanover பகுதியில் இருந்து 19 வயது இளைஞர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் ஒன்றை அளித்துள்ளார். அதில், தமது குடியிருப்பில் பச்சிளம் குழந்தை ஒன்று பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இருப்பதாகவும், குறிப்பிட்ட பெட்டியில் எலும்புக்கூடு ஒன்றும் இருப்பதாகவும் அந்த இளைஞர் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரிய வந்த பொலிசார் உடனடியாக குறிப்பிட்ட குடியிருப்புக்கு விரைந்த பொலிசார் அங்கிருந்து அந்த பச்சிளம் குழந்தையை மீட்டுள்ளனர்.குழந்தைக்கு உயிர் இன்னும் இருந்தபடியால் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது குழந்தை ஆபத்து கட்டத்தை தாண்டியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக குறிப்பிட்ட தகவலை அளித்த அந்த இளைஞரின் 22 வயது காதலியை பொலிசார் கைது செய்துள்ளனர்.இவரே அந்த குழ்னதைகளுக்கு தயாராக இருக்க வாய்ப்பு உள்ளதாக பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.அவரது பணியிடத்தில் இருந்து கைது செய்த பொலிசார் எதிர்வரும் வெள்ளியன்று நீதிமன்றத்தில் அவரை சமர்ப்பிக்கவும் திட்டமிட்டு வருகின்றனர்.
குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக தகவல் அளித்த இளைஞரை இதுவரை பொலிசார் கைது செய்யவில்லை.குறிப்பிட்ட இளம் பெண்ணின் மீது கொலை குற்றம் மற்றும் கொலைக்கு திட்டமிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். பெட்டியில் இருந்த இன்னொரு குழந்தையின் உடல் சில மாதங்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என பொலிசார் நம்புகின்றனர்.
குறித்த வழக்கு தொடர்பாக அக்கம்பக்கத்தினர் மற்றும் அந்த இளைஞனையும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.