ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் 18 வயதான வாலிபர்களுக்கு இலவச ரயில் பயணச்சீட்டு வழங்க ஆலோசனை மேற்கொண்டு வருவதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் வாலிபர்களுக்கு இந்நாடுகளின் பெருமையை உணர்த்தும் வகையில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில், 18 வயதை அடையும் ஒரு வாலிபர் மற்றும் இளம்பெண்ணுக்கு அவர்களுடைய பிறந்த நாளில் இலவச ரயில் பயணச்சீட்டு வழங்கப்படும்.இந்த பயணச்சீட்டை வைத்து ஐரோப்பாவில் உள்ள 30 நாடுகளுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் ஒரு மாதத்திற்கு பயணம் மேற்கொள்ளலாம்.
எனினும், Interrail எனப்படும் இந்த ரயில் பயணச்சீட்டை பெற முடியாத Estonia, Latvia, Lithuania, Cyprus மற்றும் Malta ஆகிய ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த வாலிபர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரப்படும்.இந்த திட்டம் குறித்து ஐரோப்பிய ஆணைய தலைவரான Jean-Claude Juncker பேசிய போது, ‘இத்திட்டம் மூலம் 18 வயதை தொடும் ஒரு வாலிபர் தனது அடுத்த ஒரு மாத ரயில் பயணத்தின் மூலம் 479 யூரோ சேமிக்க முடியும்.
ஐரோப்பிய நாடுகளில் தற்போது 18 வயதான வாலிபர்கள் சுமார் 5.4 பில்லியன் நபர்கள் உள்ளனர். இதன் அடிப்படையில் மதிப்பிட்டால், 18 வயதான வாலிபர்களுக்கு ஒரு மாத இலவச ரயில் பயணச்சீட்டு வழங்குவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 1.5 பில்லியன் யூரோ செலவாகும்.இந்த திட்டம் குறித்து ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அடுத்த மாதம் ஆலோசனை மேற்கொண்ட பிறகு இறுதி அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.