உலகின் உயரமான கட்டிடத்தில் இருந்து ஐபோனை தூக்கி வீசிய நபர்: காரணம் என்ன?

469

iphone-burj-khalifa

தொலைந்த ஐபோனை கண்டுபிடிக்கும் செயலியை சோதிக்கும் நோக்கில் உலகின் மிக உயரமான கட்டிடத்தில் இருந்து தனது ஐபோனை நபர் ஒருவர் தூக்கி வீசியுள்ளார்.துபாயில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கட்டிடத்தின் உச்சியில் இருந்து நபர் ஒருவர் தமது ஐபோனை தூக்கி விசியுள்ளார். ஐபோனில் உள்ள தொலைந்த போன ஐபோனை கண்டுபிடிக்கும் குறிப்பிட்ட செயலியை சோதிக்கும் பொருட்டே அந்த நபர் தனது ஐபோனை தூக்கி வீசியுள்ளார்.

செப்டம்பர் துவக்கத்தில் வெளியானது ஐபோன் 7 பிளஸ். இந்நிலையில் பலரும் பலவகையில் தங்களது ஐபோனை சோதித்து பார்த்துள்ளனர்.ஆனால் குறிப்பிட்ட இந்த நபர் வேறு மாதிரி தமது ஐபோனை சோதிக்க திட்டமிட்டுள்ளார். இதற்கென துபாயின் புர்ஜ் காலிபா கட்டிடத்தின் உச்சத்திற்கு சென்ற அவர், அங்கிருந்து தமது 749 டொலர் ஐபோனை தூக்கி வீசியுள்ளார்.

ஆனால் குறிப்பிட்ட செயலியை பயன்படுத்தியும் தமது ஐபோன் சிக்கவில்லை என்றே அவர் தெரிவித்துள்ளார். காரணம் அந்த ஐபோனானது மொத்தமாக சிதைந்துபோனதுதான் என்று கூறப்படுகிறது.குறிப்பிட்ட நபர் இதுபோன்று ஐபோனை சோதனைக்கு உட்படுத்துவது இது முதன்முறையல்ல. முன்னர் ஒருமுறை திரவ நிலையில் இருக்கும் நைட்ரஜனில் ஐபோனை விட்டு சோதித்தார். அதன் பின்னர் மைக்ரோ ஓவனில் வைத்து சூடாக்கினார். தற்போது உலகின் உயரமான கட்டிடத்தில் இருந்து தூக்கி வீசியுள்ளார்.இதுவரை இவர் 8 ஐபோன்களை இதுபோன்று சோதனைக்கு உட்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.