ஜெயலலிதா விவகாரத்தில் தொடரும் மர்மம் : தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு மனு!!

314

jeya

தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அரசுப்பணியை தொடர முடியவில்லை என்றால் ஆட்சியை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக முதல்வர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 12 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனால், முதல்வரின் உடல்நிலை எப்படி உள்ளது? அவருக்கு என்ன வியாதி ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பாக மர்மம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதியான ரீகன் எஸ்.பெல் என்பவர் ஜனாதிபதிக்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார்.

அதில், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை பரிசோதிக்க சிறப்பு மருத்துவர் ஒருவரை நியமித்து அவர் மூலம் அறிக்கை பெற வேண்டும்.

தமிழக முதல்வர் அரசுப்பணியை தொடரும் உடல்நிலையுடன் இருக்கிறாரா என்பதை தமிழக ஆளுநர் மூலம் ஜனாதிபதி உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.

இந்நடைமுறைகளில் முதல்வர் ஜெயலலிதா செயல்படாத நிலையில் இருந்தால், சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி தமிழக ஆட்சியை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த வேண்டும்’ என அந்த கோரிக்கை மனுவில் நீதிபதி ரீகன் எஸ்.பெல் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.