ஒரு கொலையை மறைக்க 17 கொலைகள் செய்த கொடூரன் : அதிரவைக்கும் காரணம்!!

256

man-murder-17-persons-in-china

சீனாவில் சொந்த பெற்றோரை கொலை செய்த நபர் ஒருவர் அதை மறைக்க தொடர்ந்து 17 கொலை செய்த சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் யூனான் மாகாணத்தில் குறிப்பிட்ட இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. குறிப்பிட்ட குற்றவாளியை கைது செய்துள்ள பொலிசார் அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

சமீப ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு படுகொலை சம்பவம் சீனாவில் நடந்ததில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இச்சம்பவத்தின் உண்மைத்தன்மையை வெளி உலகிற்கு தெரிவிப்பதில் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் 28 ஆம் திகதி யாங் என்பவர் தமது பெற்றோருடன் பண விவகாரம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். குறிப்பிட்ட நபர் சூதாட்டத்தில் அதிக ஆர்வக் கொண்டவர் எனவும், இதனால் பணத்தை பெருமளவில் இழந்து தற்போது கடனாளியாக மாறியுள்ளதாகவும் உள்ளூர் பத்ரிகைகள் தெரிவிக்கின்றன.

பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட யாங் ஒரு கட்டத்தில் கோபத்தில் தனது பெற்றோர் இருவரையும் கொலை செய்யும் நிலைகு தள்ளப்பட்டார்.

ஆத்திரத்தில் கொலையை செய்த யாங் அதில் இருந்து தப்பிக்க தனது வீட்டின் அருகாமையில் உள்ள குறிப்பிட்ட அனைவரையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.

கொலை செய்த கைய்யோடு அங்கிருந்து தப்பி தாம் பணி செய்யும் இடத்திற்கு தலைமறைவாகியுள்ளார். ஆனால் பொலிசார் துரத்தி சென்று யாங்கை கைது செய்துள்ளனர்.

இதுவரையான விசாரணை முடிவில் யாங் எப்ப்டி தமது பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினரை கொலை செய்தார் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால் பெற்றோருடன் சேர்த்து யாங் 19 பேரை கொடூரமாக கொலை செய்துள்ளது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 3 வயது குழந்தை முதல் 72 வயது முதியவர் வரை அடங்குவர். குறிப்பிட்ட சம்பவத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லாத நிலையில் இந்த படுகொலை சம்பவத்தை அதிகம் பிரபலப்படுத்த வேண்டாம் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டின் நன்மதிப்பை உலக நாடுகளில் இழக்க நேரிடும் என்ற அச்சமே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.