வவுனியா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு இலங்கையில் முதன் முறையாக காற்றுப் பதனாக்கி (AC)!!

293

 
நேற்று (01.10.2016) வவுனியா பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் பின்னர் டம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்..

வவுனியா வைத்தியசாலையினை தான் பொறுப்பேற்ற பின்னர் எவ்வளவோ மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாகவும் வைத்தியசாலையில் தொழிற்சங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், வவுனியா வைத்தியசாலைக்கு ஹெப்பிட்டிக்கொல, மதவாச்சி, இக்கிரிக்கொலாவ போன்ற தூர பகுதிகளிலிருந்து பெருமளவானவர்கள் சிகிச்சை பெறுவதற்கு வந்து செல்வதாகவும்,

வைத்தியசாலையில் 750 பேர் பணியாற்றும்போது சிலருக்கு சில குறைகள் தென்படும் இது தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் முறையிட்டு அது தொடர்பாக தீர்வினைப் பெற்றுக் கொள்ளுமாறும், ஊடகங்கள் செய்தி வெளியிடும்போது அதன் உண்மைத்தன்மையினை உறுதி செய்து வெளியிடுமாறும், இங்குள்ள வைத்தியர்கள் அளவிற்கு அதிகமான சேவையினை செய்து வருவதாகவும்

பணவசதி உள்ளவர்கள் தனியார் வைத்தியசாலைகளில் தங்களுக்கான சேவையினை பெற்றுக்கொண்டபோதும் வவுனியா பொது வைத்தியசாலையில் பொதுமக்களுக்கான நல்ல சேவையினை வழங்க வைத்தியசாலையிலுள்ள வைத்தியர்கள் தயாராக உள்ளதாகவும், ஒரு நாளைக்கு சராசரியாக 1000 பேருக்கு மேல் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைபெற வந்து செல்வதாகவும்,

வைத்தியசாலையில் தவறுகள் இருந்தால் தங்களிடம் சுட்டிக்காட்டுமாறும் தற்போது வவுனியா வைத்தியசாலையில் கட்டிட நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வருவதாகவும் 2020ஆம் ஆண்டளவில் பாரிய முன்னேற்றத்தினை நோக்கிச் செல்ல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் இலங்கையில் முதன் துறையாக வவுனியா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு காற்றுப் பதனாக்கி ( AC) பூட்டவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

1 dsc_0103 dsc_0104 dsc_0107 dsc_0108 dsc_0109 dsc_0113