வட்டவளை பிரதேசத்தில் ஆசிரி யர் ஒருவரின் வீட்டில் கொள்ளையடித்தார்கள் எனக் கூறபப்டும் சந்தேக நபர்களை ஜெனி ஜோர்மன் செப்பட்டா என்ற மோப்ப நாயின் உதவியுடன் 24 மணித்தியாலத்துக்குள் கைது செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்ட மோப்ப நாயின் முதல் கட்ட நடவடிக்கையின் போதே குற்றவாளிகளை துரிதமாக கண்டுபிடிக்க முடிந்துள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கடந்த முதலாம் திகதி இரவு வட்டவளை பிரதேச பாடசாலை பணிப்புரியும் ஆசிரியர் குடும்பத்தினரால் புதிதாக நில்மாணிக்கப்படும் புதிய வீட்டுக்குள் நுழைந்த நபர்கள் வீட்டின் 3லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளும் 1 லட்சம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதன் போது ஆசிரியரின் தயார் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் உரிமையாளர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து வட்டவளை பொலிஸாரினால் ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் பிரிவின் ஜெனி ஜோர்மன் செப்பட்ட இன மோப்ப நாயின் உதவியை நாடப்பட்டு வீட்டினை சோதனையிட்ட பின்னர் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஒடி சென்று குறித்த குற்றவாளிகளை இனம் காட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவர் குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளதுடன் பணத்தொகையையும் மீட்டுள்ளனர்.
கணாமல் போன தங்கம் தொடர்பில் வட்டவளை மற்றும் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.






