இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 316 ஓட்டங்களும், நியூசிலாந்து அணி 204 ஓட்டங்களும் எடுத்தது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ரோகித் சர்மா, சகாவின் நிதான ஆட்டத்தால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ஓட்டங்கள் எடுத்தது.
இதனால் நியூசிலாந்து அணிக்கு 376 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களான லாதம், கப்டில் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இவர்களின் நிதான ஆட்டத்தை அஸ்வின் முடிவுக்கு கொண்டுக்கு வந்தார். துவக்க வீரர் கப்டில் 24 ஓட்டங்களில் அஸ்வின் சுழலிலும், அடுத்த வந்த நிக்கோல்ஸ் அதே 24 ஓட்டங்களில் ஜடேஜா பந்து வீச்சிலும் ஆட்டமிழந்தனர்.
அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான டெய்லர் 4 ஓட்டங்களிலும், ரோன்சி 32 ஓட்டங்களிலும் அஸ்வின், ஜடேஜா சுழலில் வீழ்ந்தனர்.
இதற்கு அடுத்தபடியான சாண்ட்னர், வால்டிங் ஆகியோரை மொகத் சமி தன் பங்கிற்கு வெளியேற்றினார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த துவக்க வீரர் லாதம்மை அஸ்வின் வீழ்த்த, மற்றொரு வீரரான ஹென்ரியை ஜடேஜா விழ்த்தினார்.
வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் தன் பங்கிற்கு படேலயை விழ்த்தினார், 81.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 178 ஓட்டங்கள் வித்தியசாத்தில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.






