வவுனியாவில் இடம்பெற்ற கண்காட்சியில் மன்னார் மாணவனின் புதுக் கண்டுபிடிப்பு!!(காணொளி)

843

vavuniya

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற மாகாணமட்ட கண்காட்சி நிகழ்வில்  மன்னார் மாவட்டத்தின்  மடு வலயத்தை சேர்ந்த  மருதமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை பிரதிநிதி படுத்தி கலந்து கொண்ட    மாணவனால் காட்சிபடுத்தப்பட்டிருந்த நீர் இறைக்கும் இயந்திரத்தின் மூலம் சுத்தமான சுடுநீர் மற்றும் கொதித்து ஆறிய குடிநீர் என்பவற்றை பெற்றுக்கொள்வதற்காக விசேடமாக அமைக்கப்படட பொறி முறைமையை உருவாக்கியுள்ளார்.

இதன் மூலம் மணித்தியாலத்துக்கு நான்கு முதல் ஐந்து லீற்றர் வரையான சுடு தண்ணீர் அல்லது கொதித்து ஆறிய நீரை பெற்று கொள்ளலாம்.

இம் மாணவன் மென்மேலும் சாதனைகள் படைக்க வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.