வவுனியா வடக்கு வலய கரப்புக்குத்தி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வுகள் 01.10.2016 அன்று நடைபெற்றது.
வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளான ஆயிலடி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, விஞ்ஞானங்குளம் நவரட்ணம் வித்தியாலயம், பெரியமடு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, கரப்புக்குத்தி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைகள் இணைந்து கரப்புக்குத்தி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் 2016ம் ஆண்டுக்கான சிறுவர்தின விழாவை சிறப்பாக நடாத்தியிருந்தன.
இன் நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா மற்றும் சிறப்பு விருந்தினர்களாக பகுதி விவாக இறப்புப் பிறப்புப் பதிவாளர் மற்றும் வவுனியா வடக்கு வலய உதவிக்கல்விப் பணிப்பாளர், ஆரம்பக்கல்வி இ.நவரட்ணம் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அயல் பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழையமாணவர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.





























