தங்கப்­ பு­தையல் இருப்­ப­தாக கூறி நிர்­வாணப் பூஜை செய்­து 8 பேரை கொன்று புதைத்த நபர்!!

833

murder

தங்கப் புதையல் இருப்­ப­தாக ஆசைகாட்டி மனைவியையே விருந்தாக்கி நிர்­வாண பூஜை செய்து 8 பேரை நரபலி கொடுத்ததாக சப்பாணி என்ற நபரை தமி­ழக பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

திருச்சியில் கார் சாரதியான தங்கதுரை அண்மையில் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கொடுத்த முறைப்­பாட்டின் பேரில் திருவெறும்பூர் பொலி­ஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அவரது நண்பர் சப்பாணி (35) நகைக்காக தங்கதுரையை கொன்று புதைத்தமை தெரியவந்தது.

தொடர்ந்து சப்பாணியிடம் பொலிஸார் நடத்­திய விசா­ர­ணையில் பல அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்களை வெளியிட்­டுள்ளார் சப்­பா­னி.

இதன்­போது தன்னுடைய தந்தை உட்பட 8 பேரை கொலை செய்து வாய்க்கால் பகுதிகளில் புதைத்து வைத்திருப்பதாகவும் சப்பாணி ஒப்புக் கொண்டார். இந்த கொலைகளுக்கு அடிப்படை காரணமே தங்கப் புதையல்தானாம்.

சப்­பாணி 2010ஆம் ஆண்டிலிருந்து இந்த கொலைகளை செய்துள்ளார். வசதியானவர்களை குறி வைத்து தங்கப் புதையல் இருப்பதாக நம்ப வைத்ததுடன், அப்படி பணத்துடன் தங்கப் புதையலை தேடி தம்முடன் வருபவர்களுக்கு மனைவியையே முதலில் விருந்­தாக்கி அதில் காசு சம்பாதித்துள்ளார்.

புதையல் ஆசையில் சப்பாணியுடன் செல்லுபவர்களிடம் நிர்வாணமாக இருந்து பூஜை செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும் எனக் கூறி, அதன்படி அவர்களும் நிர்வாணமாகவே பூஜையில் கலந்து கொள்வர்.

மந்திரங்கள் கூறியபின்னர் சாமி கும்பிட கண்களை அவர்கள் மூடும் போது கல்லை தூக்கிப் போட்டு அவர்களை கொலை செய்துவிடுவாராம் சப்பாணி. இதன்பிறகு அவர்களிடமிருந்த பணம், நகை உள்ளிட்டவைகள் கொள்ளையடித்து விட்டு உடலையும் காட்டுப்பகுதியில் புதைத்து விடுவாராம். இதனால் சப்பாணி செய்த கொலைகள் யாருக்கும் தெரியவரவில்லை.  கடந்த 2009­­ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தம் 8 பேரை அவர் இப்படி கொலை செய்துள்­ளார்.

திருவெறும்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாயமானவர்கள், சப்பாணியால் கொலை செய்யப்பட்டவர்­கள் கோகிலா (70), அற்புதசாமி (70), விஜய்விக்டர் (27), சத்தியநாதன் (45), பெரியசாமி (75), அ.தி.மு.க. கவுன்சிலர் குமரேசன் (50), தங்கதுரை (36), சப்பாணியின் தந்தை தேக்கன் (75) ஆகிய 8 பேரை அவர் கொன்று புதைத்தமை தெரியவந்தது. இதில் பலரின் எலும்புக் கூடுகள் மீட்­கப்­பட்­டுள்­ளன.

இதனிடையே, மனைவி மோகனப்பிரியா கள்ளக் காதலனுடன் ஓடிவிட்டார். அவரையும் தேடி கொலை செய்யும் வெறியில் அலைந்து திரிந்திருக்கிறார் சப்பாணி.

இதனிடையேதான் தங்கதுரைக்கு நிர்­வாண பூஜை செய்து கொலை செய்­­துள்ளார். இந்­நி­லை­யி­லே­யே இவர் கைது செய்­யப்­பட்­­டுள்­ளார். சப்பாணியின் இந்த வாக்குமூலத்துக்கு அப்பால் தங்கப் புதையலை தேடும் நரபலி கும்பலுக்காக இக்கொலைகளை அவர் செய்தாரா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணை செய்­து வருகின்றனர்.

இத­னி­டையே, சப்பாணிக்கு துறையூர் அருகே, செல்லையா என்ற சாமியாருடன் தொடர்பு இருந்தமை தெரி­­ய­வந்­துள்­ளது. அவரிடம் தான் குமரேசன், சப்பாணிக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

தங்கதுரை கொலை செய்யப்பட்டபோது, அவர் சென்ற ஸ்கூட்டியில் மாலையும், பூஜை செய்ததற்கான அடையாளங்களும் இருந்துள்ளன.

இதனடிப்படையில், தங்கப் புதையல் எடுக்கும் ஆசையில், அனைவரையும் சப்பாணி நரபலி கொடுத்துள்ளாரா என்ற சந்தேகம், பொலி­ஸா­ருக்கு ஏற்பட்டுள்ளது. அவரை விசா­ரணை செய்­ததில் திடுக்­கிடும் உண்­மைகள் தெரி­ய­­வந்­துள்­ளன.

சப்பாணிக்கு, ஒரு அண்ணனும், தம்பியும் இருந்துள்ளனர். இதில், தம்பி தன் காதலி மோகனப்பிரியாவை வீட்டுக்கு அழைத்து சென்­றுள்­ளார். விபத்தில், தம்பி இறந்து விட, சில மாதங்கள் கழித்து, மோகனப்பிரியாவை, சப்பாணியே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கள்ளக் காதலனுடன் ஓடிய மோகனப்பிரியாவுக்கு, கொலைகளில் தொடர்பு இருக்கலாம் என, பொலிஸார் அவ­ரையும் தேடி விசாரணைக்கு உட்படுத்த உள்ளனர்.

இதற்கிடையே, தனலெட்சுமி என்ற பெண், உடல்கள் தோண்டி எடுக்கப்பட்ட இடத்துக்கு சென்று, மாயமான அவ­ரது கணவர் சண்முகம் (55) 2013ஆம் ஆண்டு முதல் மாய­மா­கி­யுள்­ள­தா­கவும், 8 பேரை புதைத்துள்ள தகவலை கேள்விப்பட்டு எனது கணவரையும் கொன்று புதைத்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆகவே இதுகுறித்து விசாரணை நடத்­தி எனது கணவரை கண்டுபிடித்து தரவேண்டும் என கூறியுள்ளார். இதனால் திருச்­சியில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.