நேற்றையதினம் (03.10.2016) வவுனியா றோயல் லீட் கல்லூரியின் மாணவர்களால் சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வொன்றில் கொடி வழங்கள் நிகழ்வொன்றும் வவுனியா பிரதான பொலிஸ்நிலயத்திற்கு முன்பாகவும் மணிகூண்டு கோபுரத்திற்கு முன்பாகவும் இடம்பெற்றது.
இதில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் போன்ற சிறுவர்களை பாதிக்கும் விடயங்களுக்கு எதிராக சுலோகங்கள் பதாதைகள் என்பனவற்றை மாணவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.
அத்துடன் சிறுவர் தின கொடிகளும் வழங்கப்பட்டது இதில் ஒருகட்டமாக வவுனியா பிரதான பொலிஸ்நிலயத்திற்கும் அதிகாரிகளுக்கும் சிறார்களால் கொடிகள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வில் வவுனியாவுடன் இணைந்து கிளிநொச்சி மாவட்ட றோயல் லீட் கல்லூரியின் மாணவர்களுமாக 300ற்கும் அதிகமான மாணவர்களுடன் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வை றோயல் லீட் கல்லூரியின் நிறுவனர் திருமதி கீதாஞ்சலியினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






















