கொய்யா மரம் முறிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழப்பு!!

887

dead

மரம் முறிந்து விழுந்ததால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென்ரெகுலஸ் தோட்டத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை 04 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், 13 வயதுடைய குனசீலன கபிலாசன் என்ற பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளான்.

வீட்டின் பின் புறத்தில் உள்ள கொய்யா மரத்தில் இருந்த கிளைகளை வெட்டியபோது மரம் முறிந்து விழுந்ததில் சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவன் உயிரழிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பான விசாரனையை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.