நீதிமன்றில் ஆஜராகுமாறு ஸ்ரீசாந்த், சவானுக்கு உத்தரவு..!

333

cricketஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகிய 3 வீரர்கள் சிக்கினார்கள்.

இதில் சண்டிலா மட்டும் சிறையில் உள்ளார். மற்ற இருவரும் பிணையில் வெளியே வந்துள்ளனர். இந்த 3 பேரையும் விசாரணை முடியும் வரை கிரிக்கெட் வாரியம் தற்காலிக பணிநீக்கம் செய்தது.

கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைமை அதிகாரி ரவிசவானி இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்து இருந்தார்.

இந்த நிலையில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோருக்கு கிரிக்கெட் வாரியம் சம்மன் அனுப்பி உள்ளது. ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு வருகிற 13–ம் திகதி டெல்லியில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள ஹர்மித்சிங், சித்தார்த் திரிவேதி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பபட்டுள்ளது.

கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு அவர்களிடம் விசாரணை நடத்துவார்கள். அவர்கள் மீதான நடவடிக்கை பற்றி ஒழுங்கு நடவடிக்கை குழு கிரிக்கெட் வாரிய செயற்குழுவில் பரிந்துரை செய்யும்.

செயற்குழுவில் இறுதி முடிவு எடுக்கப்படும். கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை குழுவில் துணைத் தலைவர்களான அருண்ஜேட்லி, நிரஞ்சன் ஷா இடம்பெற்று உள்ளனர்.