சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் நடன பெண்களுக்கு தடை!!

327

ipl

சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் நடன பெண்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்ட பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.

இதனால் கிரிக்கெட்டின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்பட்டது இதனை மீட்டெடுக்கும் முயற்சியில் “ஒப்பரேஷன் கிளீன் அப்” என்ற நடவடிக்கையில் இந்திய கிரிக்கெட் சபை இறங்கியுள்ளது.

இதன் ஒருபகுதியாக சம்பியன்ஸ் லீக் தொடரில் நடன பெண்களுக்கு தடை விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் வெளிநாடுகளை சேர்ந்த இந்த பெண்கள் நான்கு , ஆறு ஓட்டங்கள் அடிக்கப்படும் போது குறைந்தளவில் ஆடை அணிந்து கொண்டு நடனம் ஆடி ரகர்களை உற்சாகப்படுத்துவர்.

இதுகுறித்து வெளியான செய்தியில், சமீபத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கிரிக்கெட்டை சுத்தப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரைகள் செய்யப்பட்டன. இதில் நடன பெண்களுக்கு தடை விதிக்கவும் பரிசீலிக்கப்பட்டது. இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது