பொறியியலாளராக நடித்தவருக்கு திருமணச் செலவாக 50 இலட்சம் ரூபாவை வழங்கி ஏமாந்த இளம் ஆசிரியை!!

262

girl

இளம் ஆசி­ரியை ஒருவர் இணை­யத்­தளம் ஒன்றில் வெளி­யிட்ட திரு­மண விளம்­ப­ரத்தை பார்­வை­யிட்ட நபர் ஒருவர். தான் ஒரு பொறி­யி­ய­லாளர் எனவும் ஆசி­ரியை திரு­மணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரி­வித்து அவரிட­ மி­ருந்து திரு­மண செல­வு­க­ளுக்கு சுமார் 50 இலட்சம் ரூபாவை பெற்று தலை­ம­றைா­கி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து அவரைக் கைது செய்ய விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக மஹ­ர­கம பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். இவ்­வி­ரு­வரும் ஒரு­வரை ஒருவர் நேரில் பார்த்துக் கொள்­ளாமல் தொலை­பேசி உரை­யா­டல்கள் மூலமே தொடர்பை பேணி வந்­துள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.

இவ்­வா­ற­ன­தொரு சந்­தர்ப்­பத்தில், இரு­வரும் விரை­வாக திரு­மணம் செய்து கொள்வோம் எனவும் அதற்கான செல­வு­க­ளுக்­காக தனக்கு 50 இலட்சம் ரூபா வரை தேவைப்­ப­டு­வ­தா­கவும் தந்­து­த­வு­மாறு சந்­தேக நபர் குறித்த ஆசி­ரி­யை­யிடம் கோரி­யுள்ளார்.

ஆசி­ரியை தனது காத­லனின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க 50 இலட்சம் ரூபாவை எடுத்துக் கொண்டு தனது காதலை முதன்­மு­த­லாக நேரில் சந்­தித்து பணத்­தையும் கைய­ளித்து விட்டு திரும்­பி­யுள்ளார்.

மறு­ப­டியும் சந்­தேக நபர் ஆசி­ரி­யைக்கு அழைப்பு விடுத்து தனக்கு மேலும் 3 இலட்சம் ரூபாய் தேவைப்ப­டு­வ­தா­கவும் அதனை தனது வங்­கிக்­க­ணக்கில் வைப்­பி­லி­டு­மாறு தொலை­பே­சியில் தெரி­வித்­துள்ளார்.

அத­னை­ய­டுத்து இச்­சந்­தேக நபர் ஆசி­ரி­ய­ருடன் தொலை­பேசி மூல தொடர்பை இடை­நி­றுத்­தி­விட்டு எவ்­வித தக­வல்­களும் இன்றி பணத்­துடன் மாய­மா­கி­யுள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதையறிந்த குறித்த ஆசிரியை மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.