பறந்துகொண்டிருந்த விமானத்தில் பறவை மோதி உடல் பதிந்த நிலையில் தரையிறங்கியது விமானம்!!

292

f1

பறந்­து­கொண்­டி­ருந்த விமா­ன­மொன்றில் பற­வை­யொன்று மோதி­யதால், பற­வையின் உடல் விமானத்துக்குள் புகுந்த நிலையில் அவ் ­வி­மானம் தரை­யி­றங்­கிய சம்­பவம் வெனி­சூலாவில் இடம்பெற்­றுள்­ளது.

செஸ்னா 650 ரகத்தைச் சேர்ந்த இவ்­ வி­மானம் நேற்­று­ முன்­தினம் பறந்து கொண்­டி­ருந்­த­போது அதன் மீது பற­வை­யொன்று மோதி­யது. இம்­ மோ­த­லினால் அப் ­ப­றவை இறந்த நிலையில் அதன் உடலின் பகுதி விமா­னத்­துக்குள் புகுந்து கொண் ­டது.

எனினும், வெனி­சூலா சைமன் பொலிவர் விமான நிலை­யத்தில் அவ் ­வி­மா­னத்தை விமானி தரையிறக்கினார். விமா­னத்­துக்கு இதனால் சேதம் ஏற்­பட்ட போதிலும் இச்­ சம்­ப­வத்தில் எவரும் காயம­டை­ய­வில்லை என அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

மேற்­படி பறவை எந்த இனத்தைச் சேர்ந்த என்­பது உட­ன­டி­யாக தெரி­ய­ வ­ர­வில்லை. எனினும், தென் அமெரிக்­காவில் பர­வ­லாகக் காணப்­படும் கழு­கு­களில் ஒன்­றாக இது இருக்­கலாம் எனக் கருதப்படுகிறது.

விமா­னங்­களின் மீது பற­வைகள் மோது­வது புதிய விட­ய­மல்ல. 2013 ஆம் ஆண்டில் விமா­னத்தின் இயந்தி­ரங்­களில் பற­வைகள் மோதிய 1,535 சம்­ப­வங்கள் பதி­வா­கி­ய­தாக விமானப் போக்­கு­வ­ரத்து அதிகா­ரி கள் தெரி­வித்­துள்­ளனர்.

f2 f3