வவுனியாவில் புலமை பரிசில் பரீட்சையில் தமிழ் மொழிமூலம் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவன் அபிசிகன் பாடசாலை சமூகத்தால் கௌரவிப்பு!(படங்கள்,வீடியோ!)

822

கடந்த (2016)ஆகஸ்ட்  மாதம் இடம்பெற்ற புலமைபரிசில்பரீட்சையில் தோற்றி   வவுனியா மாவட்டத்தில் 195  புள்ளிகளை பெற்று  தேசியரீதியில் தமிழ் மொழியில் முதலிடத்தையும் பெற்றுக்கொண்ட  கோகுலதாசன் அபிசிககனை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (06.10.2016)  பாடசாலையில் இடம்பெற்றது .

மேற்படி நிகழ்வில் பாண்ட்  வாத்தியம் சகிதம்  இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் இருந்து பாடசாலை சமூகத்தினரின் ஏற்பாட்டில்  தேசிய சாதனையாளரான கோகுலதாசன் அபிசிகன்  ஆலய பங்குதந்தை,பாடசாலை அதிபர் ஆசிரியர்கள்  மற்றும்  மாணவர்கள்  பெற்றோர் சகிதம் அழைத்து வரப்பட்டார் .

தொடர்ந்து பாடசாலை முன்றலில் ஒன்றுகூடிய  மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் மேற்படி தேசிய சாதனையாளரான  அபிசிகனுக்கு மலர்மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும்  கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது .

தொடர்ந்து பாடசாலையில் இம்முறை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை(107) சித்தியடைய வைத்த மற்றும் அவர்களைப் பரீட்சைக்கு தயார்படுத்திய வகுப்பாசிரியர்கள் கௌரவிப்பு இடம்பெற்றதுடன் அபிசிகனது பெற்றோரும்  கெளரவிக்கபட்டனர் .

மேற்படி நிகழ்வில் பாடசாலை சமூகத்துடன்  வவுனியா தெற்கு வலய கல்வி பணிப்பாளர் சு.இராதாகிருஷ்ணன், ஆலயபங்குதந்தை சத்தியராஜ் கல்லூரி அதிபர் .அருட்சகோதரி ஜெயநாயகி செபமாலை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF