பொலிசாருக்கு பயந்து கடலில் குதித்த அகதி!!(படங்கள்)

326

ஸ்பெயின் நாட்டிற்கு சட்ட விரோதமாக குடியேற முயன்ற ஆபிரிக்க நாட்டை சேர்ந்த ஒரு கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜரோப்பிய நாடுகளில் நிதி நெருக்கடி இருந்தபோதிலும் நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஸ்பெயின் நாட்டிற்கு சட்டவிரோதமாக நுழைபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

ஆபிரிக்கா நாட்டில் உள்ள மொராக்கோ என்னும் பகுதியில் இருந்து 7 பேர் கொண்ட கும்பலானது ரப்பர் படகின் மூலம் ஸ்பெயின் நாட்டிற்கு சட்டவிரோதமாக குடியேற முயன்றுள்ளனர்.

இவர்கள் ரப்பர் படகின் மூலம் வரும்போது ஸ்பெயின் நாட்டு பொலிசாரிடம் சிக்கியுள்ளனர். இவர்களில் ஒருவர் பொலிசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக தண்ணீரில் குதித்துள்ளார்.

ஆனால் ஸ்பெயின் கடற்படை பொலிசார் அந்த நபரை கடலில் இருந்து மீட்டு கைது செய்துள்ளனர்.

இதேபோன்று கடந்த 1988ம் ஆண்டு முதல் ஸ்பெயினுக்கு புலம்பெயர்ந்து வந்தவர்களில் 20,000 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 2 3 4 5