தந்­தையின் சகோ­த­ரரால் 10 ஆண்­டு­க­ளாக வல்லுறவுக்குள்ளான பெண்!!

523

lady

பெங்­க­ளூ­ருவில், சகோ­த­ரரின் மகளை 10 ஆண்­டு­க­ளாக பாலியல் வல்­லு­றவு செய்து கர்ப்­பத்தை கலைத்த ஹோட்டல் உரி­மை­யா­ளரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

பெங்­க­ளூரு அசோக் நகர் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பகு­தியில் வசித்து வரு­பவர் சீலா (வயது21, பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது). இவர் அந்த பகு­தியில் உள்ள தனியார் கல்­லூ­ரியில் படித்து வரு­கிறார்.

இவ­ரு­டைய பெற்றோர் கடந்த 2006ஆம் ஆண்டு உயி­ரி­ழந்­துள்­ளனர். இதனால், மாலா தனது தந்தையின் சகோ­த­ர­ரான ராஜூ என்­ப­வரின் கண்­கா­ணிப்பில் வளர்ந்து வந்தார். ராஜூ ஹோட்டல் நடத்தி வரு­கிறார்.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்­டு­க­ளாக அதா­வது, சீலா சிறு­மி­யாக இருந்­ததில் இருந்தே அவரை ராஜூ பாலியல் வல்­லு­றவு செய்து வந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. மேலும், சம்­பவம் குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடு­வ­தா­கவும் அவர், சீலாவை மிரட்­டி­யுள்ளார்.

உயிர் பயத்தில் சீலா தனக்கு நேரும் கொடூ­ரத்தை யாரி­டமும் கூறாமல் இருந்­துள்ளார். இதனை ராஜூ தனக்கு சாதா­க­மாக பயன்­ப­டுத்திக் கொண்டு தொடர்ந்து உறவில் ஈடு­பட்டு வந்­துள்ளார்.

இதற்­கி­டையே சீலா கர்ப்­ப­ம­டைந்­துள்ளார். இதனை அறிந்த ராஜூ, சீலாவின் கர்ப்­பத்தை கலைத்துள்ளார்.

பின்னர் கடந்த சில நாட்­க­ளுக்கு முன்பு கல்­லூ­ரியில் இருந்து வீடு திரும்­பிய சீலாவை மீண்டும் வல்லுறவுக்­குட்­படுத்­தி­யுள்ளார். இந்­நி­லை­யி­லேயே தனது வாழ்க்கை இப்­படி ஆகி­விட்­டதே என்று மனம் உடைந்த சீலா, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தோழி­யிடம் கூறி கதறி அழு­துள்ளார். இது ­கு­றித்து, அவ­ரு­டைய தோழி, சீலா படித்து வரும் கல்­லூரி முதல்­வ­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

அதனை தொடர்ந்து சீலாவின் சார்பில் கல்­லூரி நிர்­வாகம் அசோக் நகர் பொலிஸ் நிலை­யத்தில் ராஜூ மீது முறைப்­பாடு செய்­தது. அதனை தொடர்ந்து பொலிஸார் வழக்­குப்­ப­திவு செய்து ராஜூவை கைது செய்­தனர்.

பாதிக்­கப்­பட்ட சீலா அரச பெண்கள் காப்­ப­கத்தில் சேர்க்­கப்­பட்­டுள்ளார். ஹோட்டல் உரி­மை­யாளர் ஒருவர் தனது சகோ­த­ரரின் மகளை 10 ஆண்டுகளாக வல்­லு­றவு செய்து கர்ப்பத்தை கலைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.