முதல் முறையாக மூடப்பட்ட Walt Disney World!!

361

walt-disney-world

அமெரிக்காவில் 140mph வேகத்திற்கு புயல் வீசுவதால் Walt Disney World தீம் பார்க் முதல் முறையாக மூடப்பட்டுள்ளது.

புளோரிடா மாகாணத்தை Matthew புயல் தாக்கவிருப்பதால், பாதுகாப்பு கருதி அங்கு அமைந்துள்ள Walt Disney World முதல் முறையாக மூடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், “theme parks, water parks, Disney Springs, Disney’s miniature golf course மற்றும் ESPN Wild World Sports Complex ஆகிய அனைத்தும் இன்று மாலை 5 மணியுடன் மூடப்படுகிறது.

அக்டோபர் 7 ஆம் திகதி வரை இந்த தீம் பார்க்க மூடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.

Haiti நாட்டில் இந்த புயலின் தாக்கத்தால் 100 பேர் வரை இறந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலில் தாக்கத்தால் மரக்கிளைகள் மக்கள் மீது விழுந்ததில் பாதி பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த Matthew புயலால் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், உணவுப்பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் முன்கூட்டியே சேகரித்துவைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க தேசிய சூறாவளி மையம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், 6 ஆம் திகதி இரவு புளோரிடா மாநிலத்தை நெருங்கும் இந்த புயல், அன்றை இரவுப்பொழுது கழிகையில் மாநிலம் முழுவதையும் சுருட்டிவிடும். இந்த புயல் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளது.